Take a fresh look at your lifestyle.

நொய்டா ஆடைகள் தொழிற்சாலையில் பயங்கர தீ

125

நொய்டாவில் ஆடைகள் தயாரிப்பு தொழிற்சாலையில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக இன்று காலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

நொய்டாவின் பேஸ் 2 பகுதியில் உள்ள தொழிற்சாலையில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும், 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆடைகள் தயாரிக்கப்படும் தொழிற்சாலை என்பதால், தீ பரவியதையடுத்து, பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தால் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. ஆனால் பொருள் சேதம் பெருமளவில் ஏற்பட்டுள்ளது. தீ விபத்துக்குக் குறைந்த மின்னழுத்தமே காரணம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.