நெல்கொள்முதலில் முறைகேடு செய்ததாக 3 அரசு அதிகாரிகள் உள்பட 9 பேர் கைது: சிபிசிஐடி நடவடிக்கை
cbcid arrested 9 persons vellur and thiruvannamalai
நெல்கொள்முதலில் முறைகேட்டில் ஈடுபட்டு அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 3 அரசு அதிகாரிகள் மற்றும் 6 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின்கீழ் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட் டங்களில் நெல் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்தது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கடந்த ஏப்ரல் மாதம் வழக்குகள் பதிவு செய்தனர். அது தொடர்பாக வேலூரைச் சேர்ந்த மகேஷ் (வயது 43) என்பவரை கைது செய்தனர். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து மேலும் திருவண்ணாமலை சிபிசிஐடி போலீசார் நெல் கொள்முதல் மோசடி தொடர்பாக தமிழ்நாடு கோஆப்ரேட்டிவ் சொசைட்டியின் திருநெல்வேலி மண்டல முன்னாள் மேலாளர் கோபிநாத் (வயது 45) என்பவர் இன்று கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை 3 அரசு அதிகாரிகள் உள்பட 9 பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கைதானவர்கள் மீது நெல்கொள்முதலில் மோசடியில் ஈடுபட்டு அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது