நெய்யை தொடர்ந்து ஆவின் வெண்ணெய் விலையும் கிலோவிற்கு ரூ.20 உயர்த்தப் பட்டுள்ளது. புதிய விலை இன்று முதல் அமலுக்கு வந்தது.
ஆவின் வெண்ணெய் விலையை உயர்த்தி ஆவின் நிர்வாகம் இன்று அறிவிப்பு வெளியி ட்டுள்ளது. இதன்படி சமையலுக்கு பயன்படுத்தப்படும் உப்பு கலக்காத 100 கிராம் வெண் ணெய் 52 ரூபாயிலிருந்து 55 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 500 கிராம் 250 ரூபாயி லிருந்து 260 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உப்பு கலந்த 100 கிராம் வெண்ணெய் 52 ரூபாயிலிருந்து 55 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 500 கிராம் 255 ரூபாயிலிருந்து 265 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக அனைத்து ஒன்றியங்களின் பொது மேலாளர்களுக்கும் நிர்வாக இயக்குநர் சுப்பையன் சுற்றறிக்கை அனுப்பியிருந்த நிலையில் புதிய விலை அமல்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மார்ச் மாதம் ஆவின் நெய், தயிர் உள்ளிட்ட பால் பொருட்கள், கடந்த நவம்பர் மாதம் ஆவின் ஆரஞ்சு பால், நேற்று மீண்டும் ஆவின் நெய் உள்ளிட்ட பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தொடர்ந்து ஆவின் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டு வருவது பொதுமக்கள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நெய் உற்பத்திக்கு மூலப்பொருளான வெண்ணெய் விற்பனை விலையை கடந்த இரண்டரை ஆண்டு காலமாக உயர்த்தாமல் இருந்து விட்டு, நெய் விற்பனை விலையை மட்டும் கடந்த 9 மாதங்களில் லிட்டருக்கு 115 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது ஆவின் நிர்வாகம். இப்போது வெண்ணெய் விலையையும் உயர்த்திவிட்டனர். உடனடியாக அமலுக்கு வந்த இந்த விலை உயர்வை ஆவின் நிறுவனம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.