நீதிபதிகளின் சம்பளம் உயர்வதால் மட்டும் நீதித்துறைக்கு நல்லவர்கள் கிடைப்பதில்லை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பேச்சு
அரசியலமைப்பு நாள் கொண்டாட்டத்தையொட்டி டெல்லியில் சுப்ரீம் கோர்ட் வழக்க றிஞர்கள் பார் கூட்டமைப்பு சார்பில் விழா நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட், “ஜனநாயகத்தில் எந்த ஒரு அமைப்பும் பூரணமானது அல்லது. அதற்கு கொலீஜியம் முறை மட்டும் விதிவிலக்கா என்ன? ஆனால் கருத்து வேறுபாடுகளோ, சிக்கல்களோ ஏற்படும்போது நாம் அந்த அமைப்புக்கு உட்பட்டே அதற்கு தீர்வு காண்பது அவசியம். அதையும் மீறி ஒரு வழக்கறிஞர் நீதிபதியாவது என்பது மனசாட்சியின் குரலுடன் இணைந்து போவது. மக்கள் சேவையில் அவருக்கு உள்ள அர்ப்பணிப்பு. கொலீஜியம் சர்ச்சைக்கான விடையெல்லாம் நாம் இளைஞர்களுக்கு எப்படி முன்மாதிரியாக திகழ்ந்து அவர்களின் நீதிபதி கனவிற்கு வித்திடுகிறோம் என்பதில் தான் இருக்கிறது. நீதிபதிகளின் ஓய்வுக் காலத்திற்குப் பின்னரும் கூட அவர் களிடமிருந்து பிரித்து எடுக்க முடியாத ஒன்று மனநிறைவு. நீதிபதிகளின் சம்பளம் உயர்வதால் மட்டும் நீதித்துறைக்கு நல்லவர்கள் கிடைப்ப தில்லை2020 மே மாதம் நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டிலிருந்தேன். அப்போது எனக்கொரு மின்னஞ்சல் வந்தது. அதில், இந்திய கடற்படையின் பெண் கமாண்டர்கள், “நீங்கள் எங்களை நேரில் பார்த்தது கிடையாது. ஆனால் நீங்கள் எங்களுக்காக செய்த நியாயத்திற்காக உங்கள் நலன் வேண்டி பிரார்த்திக்கிறோம்” என்று குறிப்பிட்டிருந்தனர். அதுதான் ஒரு நீதிபதிக்குக் கிடைக்கக் கூட பெரிய நிம்மதி” என்றார்.