நில அபகரிப்பில் ஈடுபட்ட இருவருக்கு தலா 3 ஆண்டுகள் ஜெயில்: கோர்ட்டு தீர்ப்பு
land graphers convicted for 3 years jail
சென்னை பள்ளிக்கரணையில் விஜயா மனோகர் என்பவருக்கு சொந்தமான 25 சென்ட் நிலம் உள்ளது. இந்நிலையில் அழகு சுந்தரம் மற்றும் ராஜாபாதர் ஆகியோர்கள் பொது அதிகார ஆவணம் பதிவு செய்து கொடுத்தது போல போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரித்துள்ளனர். அது தொடர்பாக சென்னை காவல் ஆணையாளரிடம் விஜயா புகார் அளித்தார். கடந்த 207ம் ஆண்டு அளித்த இந்த புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதனையடுத்து குற்றவாளிகள் அழகு சுந்தரம், ராஜாபாதர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னை சைதாப்பேட்டை 11-வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. போலீசார் இந்த வழக்கு தொடர்பாக சாட்சியங்களை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது 2013 ஆம் ஆண்டு சென்னை அல்லிக்குளம் கோர்ட்டுக்கு விசாரணைக்கு மாற்றப்பட்டது. கடந்த 9 ஆண்டுகளாக நடந்து வந்த விசாரணை முடிவுக்கு வந்தது. இவ்வழக்கின் எதிரிகள் மீது நீதிமன்ற நடுவர் ராஜேஷ் ராஜீ தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் எதிரி அழகுசுந்தரம் என்பவருக்கு இ.த.ச பிரிவு 368 ன்படி 3 ஆண்டுகள் சிறை தண்டணையும், ரூபாய் 5 ஆயிரம் அபராதமும், மேலும் இ.த.ச பிரிவு 420 ன்படி 3 ஆண்டுகள் சிறை தண்டணையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், இ.த.ச பிரிவு 471ன்படி 2 ஆண்டுகள் சிறை தண்டணையும், சிறைதண்டணையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் 2வது எதிரியான ராஜா பாதர் என்பவருக்கு இ.த.ச பிரிவு 368ன் படி 3 ஆண்டு சிறை தண்டணையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் புகார்தாரர் விஜயாவின் வாரிசுகளுக்கு அழகு சுந்தரம் ரூ. 1 ரூபாய் நஷ்ட ஈடாக 3 மாதத்திற்குள் வழங்கவும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் புலன் விசாரணை செய்த மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் திறம்பட செயலாற்றிய காவல் ஆளினர்களை சென்னை மாநகர காவல் ஆணையாளர் மற்றும் மத்திய குற்றப் பிரிவு கூடுதல் காவல் ஆணையாளர் தேன்மொழி ஆகியோர் வெகுவாக பாராட்டினார்கள்.
******