நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணி 21 ரன் வித்தி யாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூ சிலாந்து கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்றிரவு நடந்தது.
இதில் ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பின் ஆலெனும், டிவான் கான்வேவும் நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக் கெட்டுக்கு 176 ரன்கள் குவித்தது. டேரில் மிட்செல் 59 ரன்களுடனும் (30 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்), சோதி ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர். இந்திய தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டும், அர்ஷ்தீப்சிங், குல்தீப் யாதவ், ஷிவம் மாவி தலா ஒரு விக்கெட்டும் வீழ்த் தினர். பின்னர் 177 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இஷான் கிஷன் (4 ரன்), ராகுல் திரிபாதி (0), சுப்மான் கில் (7 ரன்) அடுத்தடுத்து வீழ்ந்தனர். 15 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை தூக்கி நிறுத்த துணை கேப்டன் சூர்யகுமார் யாதவும், கேப்டன் ஹர்திக் பாண்ட் யாவும் போராடினர். எதிரணி கேப்டனும், சுழற்பந்து வீச்சாளருமான மிட்செல் சான்ட்னெர் தனது சுழல் ஜாலத்தால் கடும் நெருக்கடி கொடுத்தார். அவரது ஒரு ஓவரில் சூர்யகுமார் யாதவ் ரன்னே எடுக்காமல் மெய்டனாக்கினார்.
இந்த ஜோடியால் ஸ்கோரை தடாலடியாக அல்லாமல் மிதமாகத்தான் உயர்த்த முடிந்தது. இதனால் ரன்தேவை எகிறிக் கொண்டே போனது. ஸ்கோர் 83-ஐ எட்டிய போது (11.4 ஓவர்) சூர்யகுமார் 47 ரன்களில் ( 34 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) சோதி வீசிய பந்தை சாதாரணமாக தூக்கிவிட்டு கேட்ச் ஆனார். அடுத்த ஓவரில் ஹர்திக் பாண்ட்யாவும் (21 ரன்) பெவிலியன் திரும்பினார்.
இதன் பின்னர் ஒரு பக்கம் விக்கெட் சரிந்தாலும் ஆல்-ரவுண்டரான தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் சற்று ஆறுதல் அளித்தார். 10 ரன்னில் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பி த்த வாஷிங்டன் சுந்தர் கடைசி கட்டத்தில் ஒரு சில சூப்பரான ஷாட்டுகளால் ரசிகர்களை குதூகலப்படுத்தினார். டிக்னெர், டப்பி, பெர்குசனின் பந்துவீச்சில் சிக்சர்விரட்டிய வாஷிங் டன் சுந்தர் கடைசி ஓவரில் தனது முதலாவது அரைசதத்தை நிறைவு செய்தார். அதே ஓவரில் அவர் 50 ரன்களில் (28 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார்.
20 ஓவர்களில் இந்திய அணியால் 9 விக்கெட்டுக்கு 155 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் நியூசிலாந்து 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சுற்றுப்பயணத்தில் நியூசிலாந்துக்கு கிடைத்த முதல் வெற்றி இதுவாகும். சுழற்பந்து வீச்சாளர் சான்ட்னெர் 4 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 11ரன்கள் மட்டுமே கொடுத்து சிக்கத்தை காட்டியதுடன் 2 விக்கெட்டும் வீழ்த்தினார். பிரேஸ்வெல், பெர்குசனும் தலா 2 விக்கெட் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து 1- 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது 20 ஓவர் போட்டி லக்னோவில் நாளை நடக்கிறது.