Take a fresh look at your lifestyle.

நாளை பெண்கள் தினம்: சென்னை ஆவடி கமிஷனரேட்டில் போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் புது உத்தரவு

110

நாளை பெண்கள் தினத்தை ஒட்டி சென்னை ஆவடி கமிஷனரேட்டில் புதிய உத்தரவு ஒன்றை அமல்படுத்தி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் உத்தரவிட்டுள்ளார்.

நாளை மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர்தினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி சென்னை ஆவடி கமிஷனரேட்டில் புதிய உத்தரவு ஒன்றை ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் வெளியிட்டுள்ளார். ‘‘சென்னை ஆவடி கமிஷனரேட்டில் பெண் அதிகாரிகளுக்கான புதிய அடையாள பிரதிநிதித்துவத்தின் மூலம் கடைபிடிக்க உள்ளது.

இந்தியாவிலேயே முதன்முறையாக ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் பெண் அதிகாரிகள் தலைமை தாங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆவடி கமிஷனரேட் தலைமையிட கூடுதல் கமிஷனர் விஜயகுமாரி ஆவடி சட்டம், ஒழுங்கு இணைக்கமிஷனர் பதவியின் கூடுதல் பொறுப்பை கவனிப்பார். அதே போல ஆவடி போலீஸ் கமிஷனரேட் நிர்வாகம் மற்றும் தலைமையிட துணைக்கமிஷனர் உமையாள் ஆவடி மற்றும் செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையாளராக செயல்படுவார். இந்த முயற்சி காவல்துறை சீருடை அணிந்த சேவையில் மகளிரின் பங்கை அங்கீகரித்து கவுரவிக்கும் விதமாக கொண்டாடப்படவுள்ளது’’. இவ்வாறு அவர் தெரிவித்தார்.