Take a fresh look at your lifestyle.

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற உழைப்போம்: அதிமுக மாணவர் அணி சூளுரை

64

அதிமுக ஆட்சியின் சாதனைகளையும், மக்கள் நல திட்டங்களையும் பட்டி தொட்டி எங்கும் மக்களிடம் எடுத்து சொல்லியும், தி.மு.க. ஆட்சியின் மக்கள் விரோத போக்கை மக்களிடம் எடுத்து சொல்லியும் அண்ணா தி.மு.க. மாணவர் அணி முடிவு செய்துள்ளது.

நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற இரவு பகல் பாராது உழைக்க சூளுரைக்கப்பட்டது. சென்னை தலைமைக் கழகத்தில் – அண்ணா தி.மு.க. மாணவர் அணி செயலாளர் எஸ்.ஆர். விஜயகுமார் தலைமையில் இன்று – மாணவர் அணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மாணவர் அணி சார்பில் வரும் 25 ந் தேதி வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்களை மாவட்டந்தோறும் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி, முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார், செம்மலை, எம்.ஆர்.விஜயபாஸ்கர், பாசறை செயலாளர் டாக்டர் பரமசிவம், தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் சத்தியன், இலக்கிய அணி இணை செயலாளர் டி.சிவராஜ் உட்பட பலர் பங்கேற்று பேசினார்கள்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தமிழர் வாழ்வியல் சிறப்பையும், பெருமை களையும் உலகிற்கு உணர்த்தும் வகையில் 8 ம் உலகத்தமிழ் மாநாடு நடத்தி இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழோடு அறிவியல் தமிழ் என்னும் 4- ம் தமிழை அறிமுகப்படுத்தி, தமிழக மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்து மக்களால் நான், மக்களுக்காகவே நான்”, உங்களால் நான், உங்களுக்காகவே நான்” என்று தவ வாழ்வு வாழ்ந்து, நம்மையெல்லாம் ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டு, விண்ணுலகம் சென்றுவிட்ட, புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் அன்னைத் தமிழுக்காக உயிர்த் தியாகம் செய்திட்ட மொழிப் போர் தியாகிகளை நினைவு கூறும் வகையில், வருகின்ற

ஜனவரி 25 ம் தேதி, கழக மாணவர் அணியின் சார்பில், கழக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழிகாட்டுதலோடு, தமிழகம் முழுவதும் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டத் தலைநகரங்களில் வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்கள்” சிறப்பான முறையில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டும், தமிழ்நாட்டின் மேம்பாட்டை கவனத்தில் கொண்டும், எண்ணிலடங்கா முன்னோடித் திட்டங்களையும், முன்னேற்றத் திட்டங்களையும் புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் செயல்படுத்தி, இந்தியாவிலேயே தமிழகத்தை சிறந்த மாநிலமாக, சிறப்பான முதன்மையான முன்னோடி மாநிலமாக அமைதி வளம் -வளர்ச்சி” என்ற பாதையில் சிறப்பாக செயல்பட்ட, எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஆற்றிய பொன் எழுத்துக்களால் பொறிக்கத்தக்க அரும்பெரும் சாதனைகளாகும்.

சமூக நீதி காக்கும் வகையில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு; பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே ஏற்பு; அம்மா மினி கிளினிக்; விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கப் பரிசு; உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் ரூ. 25,000 – அம்மா இரசக்கர வாகன திட்டம்; விவசாயிகள் வாழ்வில் வளம் காணும் வகையில் கூட்டுறவுத் துறை வங்கிகள் மூலம் சுமார் 16.43 லட்சம் விவசாயிகள் வாங்கிய 12,110 கோடி ரூபாய் பயிர்க் கடன் தள்ளுபடி; நெசவாளர்களுக்கு கட்டணமில்லா மின்சாரம்; 50 வருட காவிரிப் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு; நீர் மேலாண்மையில் முதலிடம்; உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு; தமிழ் அறிஞர்களுக்கு ஊக்க தொகை அதிகரிப்பு என, பல்வேறு முன்னோடி திட்டங்களை செயல்படுத்தியவர் எடப்பாடி.

அன்னைத் தமிழகத்தை ஏழை, எளிய உழைக்கும் மக்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தி, மக்களின் தொண்டராக, மக்களாட்சி நடத்தி, தமிழக மக்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்திருக்கும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் கழக அரசு ஆற்றிய சிறப்பான மக்கள் நலத் திட்டங்களை பட்டிதொட்டியெங்கும் சாதனை விளக்கப் பிரச்சாரத்தின் வாயிலாக எடுத்துரைத்து, 2024 -ல் நடைபெற இருக்கும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், அண்ணா தி.மு.க. அனைத்துத் தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும் வகையில், தமிழ்நாடெங்கும் சிறப்பான முறையில் இரவு-பகல் பாராமல் களப் பணியாற்றுவது என கழக மாணவர் அணி சூளுரை ஏற்கின்றது.

தமிழக மக்களின் மேன்மைகளையும், வளர்ச்சியையும் மட்டுமே தன் வாழ்வின் ஒரே இலக்காகக் கொண்டு செயலாற்றி மறைந்த புரட்சித் தலைவி அம்மாவின் வழியில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்பட்ட கழக அரசு நித்தம்-நித்தம் சிந்தித்து, விவசாயிகள் வாழ்வு வளம் பெறவும், நெசவாளர்கள் மனநிறைவு பெறவும், ஏழை, எளிய மக்கள் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தவும், இளைஞர்கள், மாணவ, மாணவிகள் கல்வியில் சிறப்பு பெற்று விளங்கவும், தமிழக மக்களின் மேன்மை, வளர்ச்சி பெறவும் பல்வேறு முன்னோடித் திட்டங்களையும், நலத் திட்டங்களையும் செயல்படுத்தி மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மக்களுக்கான அரசு” என்பதை தமிழக மக்களின் இல்லங்கள் தோறும் துண்டுப் பிரச்சுரங்கள் வாயிலாகவும்,

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாணவர் குழுக்களை ஏற்படுத்துதல்; மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு, குடும்ப சுய லாபத்திற்காக ஆட்சி நடத்திவரும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், மக்கள் படும் இன்னல்களை, அவலங்களை, அவர் அளித்த பொய்யான வாக்குறுதிகளை மக்களிடையே எடுத்துரைத்து, 2024-ல் நடைபெறும் நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் கழகம் 100 சதவீதம் முழுமையான வெற்றியைப் பெற்று புதிய வரலாற்றுச் சரித்திரம் படைத்திட, தமிழ்நாடெங்கும் சிறப்பான முறையில் அர்ப்பணிப்பு உணர்வோடு கழக பணியாற்றுவது என கழக மாணவர் அணி தீர்மானிக்கிறது.

தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமைகளையெல்லாம் விட்டுக்கொடுத்து, சட்டம் -ஒழுங்கை சீர்குலைத்து, குடும்ப வாரிசுகளுக்கே பல கட்சிப் பதவிகளை பங்கிட்டுக் கொடுத்து, குடும்ப வாரிசு அரசியலுக்காகவே கட்சி நடத்தி, ஜனநாயகத்தை பணநாயகத்தால் கேலிக் கூத்தாக்கி, நடைமுறைக்கு சாத்தியமில்லாத, நிறைவேற்ற முடியாத தேர்தல் வாக்குறுதிகளான, நீட் தேர்வை ரத்து செய்ய முதல் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்படும் எனவும், அரசுத் துறை கல்வி நிலையங்களில் 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும், அரசுப் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இலவச டேட்டாவுடன் மடிக் கணினி வழங்கப்படும் எனவும், அரசு ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டம் ரத்து எனவும், ஆட்சி பொறுப்பேற்றதும் கல்விக் கடன் ரத்து, மகளிருக்கு ரூ. 1,000 மாதம் வழங்கப்படும் எனவும், இலங்கை இனப் படுகொலை குறித்து சர்வதேச விசாரனை நடத்த உலக நாடுகளை மத்திய அரசு வலியுறுத்த நடவடிக்கை எனவும், மாநில சுயாட்சி என மக்களை நம்ப வைத்து ஏமாற்றி கார்ப்பரேட் கம்பெனி துணையோடு, பொம்மை ஆட்சி நடத்தி வரும் முதலமைசசர் ஸ்டாலின் தலைமையிலான தி.முக. அரசின் முகத்திரையைக் கிழித்திடும் வகையில், நடைபெற இருக்கின்ற 2024 நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் சுயநலவாதிகளான தி.மு.க.-வும், முதலமைச்சரான ஸ்டாலினும் எந்த ரூபத்தில் வந்தாலும், தமிழக மக்கள் அவர்களை ஓட ஓட விரட்டியடிக்க வேண்டுமாய் கழக மாணவர் அணி வேண்டி கேட்டுக் கொள்கிறது.

2011 முதல் 2020 வரை கழக அரசு மாணவர்களுக்கு செய்திட்ட, சிறப்புத் திட்டங்கள், நல உதவிகள், கழக அரசின் சாதனகளை எடுத்துரைத்து, பெருமளவிலான மாணவ, மாணவிகளை கழகத்தில் உறுப்பினர்களாக சேர்ப்பது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தி.மு.க. அரசு மக்கள் நலனில் துளியும்கூட அக்கறை இல்லாமல், அன்றாட வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, வீட்டு வரி உயர்வு, ஆவின் பொருட்கள் விலை உயர்வு, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் விலைவாசி உயர்வு என தி.மு.க. ஆட்சியில் அனைத்துப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்து வருகின்றது. பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்திவிட்டு, நிறை கொழுப்பு சத்து கொண்ட ஆரஞ்சு நிற பால் விற்பனை விலையை 12 ரூபாய் என உயர்த்தி சாமானிய மக்களை வஞ்சித்தும், மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலைகளைக் குறைத்தும் தமிழகத்தில் விலையை குறைக்கவில்லை. தமிழகத்தில் கனிம வள கொள்ளை அதிகரித்துள்ளது. கடந்த 18 மாத கால தி.மு.க. ஆட்சியில் விலை உயர்வு மட்டுமே சாதனையாக உள்ளது. நாள்தோறும் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறி, ஏழை, எளிய நடுத்தர மக்களின் நலனில் அக்கறையில்லாத தி.மு.க. அரசுக்கு கழக மாணவர் அணி தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.