Take a fresh look at your lifestyle.

நாங்குநேரியில் பாதயாத்திரை சென்ற பெண் துறவி மீது வேன் மோதி பலி

63

நாங்குநேரி அருகே பாதயாத்திரை பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்து பெண் துறவி ஒருவர் பலியானார்.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருந்து நாடு முழுவதும் உள்ள கோவில்களுக்கு சமணத் துறவிகள் 7 பேர் நடை பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் தமிழகத்தின் தென் கோடியில் உள்ள கன்னியாகுமரிக்கு செல்வதற்காக நான்கு வழிச் சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த ஆழ்வார்குளம் விலக்கு பகுதியில் இன்று அதிகாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்தனர். அவர்களுடன் அவர்களது உடமை களை ஏற்றிக் கொண்டு ஆம்னி வேன் ஒன்றும் அவர்கள் பின்னால் சென்றது. அப்போது சென்னையில் இருந்து கூடங்குளம் பகுதிக்கு இரும்பு கம்பிகளை ஏற்றி சென்ற லாரி ஒன்று எதிர்பாராத விதமாக ஆம்னி வேன் மீது மோதியது. இதனால் ஆம்னி வேன் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற துறவிகள் மீது மோதியது. இதில் பெண் துறவிகளான ருசிலா ஸ்ரீஜி (வயது 63), தீன் தயாள் (33) உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதனைப் பார்த்த வர்கள் நாங்குநேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ருசிலா ஸ்ரீஜி பரிதாபமாக உயிரிழந்தார்.