டெல்லியில் இருந்து விமானம் மூலம் பிரதமர் மோடி மகாராஷ்டிர மாநிலம் நாக்பூருக்கு வந்தார். நாக்பூர் விமான நிலையத்தில் அவருக்கு மாநில அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை வரவேற்க விமான நிலையத்தில் ‘டிரம்ஸ்’ இசைக்கருவி வாசிக்கப்பட்டது. விமான நிலையத்தில் தரை இறங்கிய அவர் அங்கு தன்னை வரவேற்க காத்திருந்த ‘டிரம்ஸ்’ இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து ‘டிரம்ஸ்’ இசைத்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பின்னர் நாக்பூரில் ரூ. 75 ஆயிரம் கோடி அளவில் நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.