இம்மாதம் 15ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி புதுவை வருகிறார் என்று சபாநாயகர் ஆர். செல்வம் தெரிவித்தார். அது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘‘புதிதாகக் கட்டப்படவிருக்கும் புதுவை சட்டமன்றக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு வதற்கான விழா வரும் 15 ந் தேதி நடைபெற விருக்கிறது. அவ்விழாவில் கலந்துகொண்டு புதுவை சட்டமன்றக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் மோடி அன்றைய தினம் புதுவை வருகிறார். புதுவையில் அமைக்கப்பட்டுள்ள தியாகிகளின் தியாகத்தூண் தியாகச்சுவர் ஆகியவற்றையும் பிரதமர் மோடி அன்றைய தினம் திறந்து வைப்பார் .புதிதாகக் கட்டப் படவிருக்கும் புதுவை சட்டமன்றக் கட்டிடத்திற்கான வரைபடங்கள் தயாரிப்புப்பணி நடைபெற்றுவருகிறது’’. இவ்வாறு சபாநாயகர் செல்வம் தெரிவித்தார்.