Take a fresh look at your lifestyle.

நன்னடத்தை பிணை உறுதிமொழியை மீறிய திருடனுக்கு மீண்டும் ஜெயில்: துணைக்கமிஷனர் ஈஸ்வரன் உத்தரவு

one arrested for violating probation bail dcp easwaran ordered

121

1 வருட கால நன்னடத்தை பிணை உறுதிமொழியை மீறி மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்ட திருடனுக்கு 232 நாட்கள் சிறையிலடைக்க புளியந்தோப்பு துணைக்கமிஷனர் ஈஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, பெரம்பூர், மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் வசித்து வருபவர் ஏழுமலை. இவர் மீது சுமார் 11 திருட்டு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் ஏழுமலை கடந்த 24.12.2021 அன்று புளியந்தோப்பு துணைக்கமிஷனர் ஈஸ்வரன் முன்பு சாட்சிகளுடன் ஆஜராகி, தான் திருந்தி வாழப்போவதாகவும், 1 வருட காலத்திற்கு எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபடமாட்டேன் எனவும், நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்தார்.

ஆனால், ஏழுமலை கடந்த 29.04.2022 அன்று பெரம்பூர் பகுதியில் உள்ள வீட்டிற்குள் நுழைந்து பணம் ரூ. 15 ஆயிரம்- 1 செல்போன், 1 லேப்டாப், 2 கேமராக்கள் 1 I-Pad மற்றும் இருசக்கர வாகனத்தை திருடிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார். ஏழுமலை 1 வருட காலத்திற்கு எந்த குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டேன் என எழுதி கொடுத்த நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக, செயல்முறை நடுவராகிய புளியந்தோப்பு துணைக்கமிஷனர் ஈஸ்வரன் ஏழுமலை மீது நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டுள்ளார். கு.வி.மு.ச. பிரிவு 109 கீழ் பிணை ஆவணத்தில் எழுதி கொடுத்த 1 வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் மற்றும் சிறையிலிருந்த நாட்கள் கழித்து, மீதமுள்ள 232 நாட்கள் பிணையில் வர முடியாத சிறை தண்டனை விதித்து நேற்று (19.05.2022) உத்தரவிட்டார். அதன்பேரில், ஏழுமலை நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.