சென்னை பெருநகரில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும் கமிஷனர் சங்கர்ஜிவால் பல் வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த 1.01.2023 முதல் 27.1.2023 வரை சென்னை பெருநகரில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதி க்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 8 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 9 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 8 குற்றவாளிகள் என மொத்தம் 25 குற்றவாளிகள் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 21.01.2023 முதல் 27.01.2023 வரையிலான ஒரு வாரத்தில் 2 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
குற்றவாளி செங்கல்பட்டைச் சேர்ந்த ராகேஷ் (எ) ராக்கி, 24 என்பவர் மீது 6 குற்ற வழக்குகள் உள்ள நிலையில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதற்காக எம்.கே.பி நகர் காவல் நிலைய த்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். ராக்கியின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த எம்.கே.பி நகர் காவல் நிலைய ஆய்வாளர் பரிந்துரை செய்த தின் பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் ராகேஷை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க கடந்த 25.01.2023 அன்று உத்தரவிட்டார். அதன்பேரில் குற்றவாளி ராகேஷ் (எ) ராக்கி குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதே போல ஆலந்தூரைச் சேர்ந்த குலாப் பாஷா, 39 என்பவர் வழிப்பறி குற்றத்தில் ஈடுபட்டதற்காக மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். புனித தோமையர்மலை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது ஏற்கனவே 5 குற்ற வழக்குகள் உள்ளது. குலாப் பாஷா என்ப வரின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த மடிப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் பரிந் துரை செய்ததின் பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் குற்ற வாளியை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க நேற்று (27.01.2023) உத்த ரவிட்டார். அதன்பேரில் குற்றவாளி குலாப் பாஷா குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், குற்ற வழக்குகள் உள்ள நபர்கள், சம்பந்தப்பட்ட செயல்துறை நடுவர்களாகிய துணை ஆணையாளர்கள் முன்பு சாட்சிகளுடன் ஆஜராகி, தான் திருந்தி வாழப் போவதாகவும், இனி 1 வருடத்திற்கு எந்த குற்றச் செயலிலும் ஈடுபட மாட்டேன் எனவும் நன்னடத்தை பிணை பத்திரங்கள் எழுதி கொடுத்து, மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் 5 குற்றவாளிகள், மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் 4 குற்றவாளிகள், புளியந்தோப்பு, அண்ணாநகர் மற்றும் புனித தோமையர்மலை காவல் மாவட்டங்களில் தலா 1 குற்றவாளி என மொத்தம் 12 குற்ற வாளிகள் கடந்த 21.01.2023 முதல் 27.01.2023 வரையிலான ஒரு வாரத்தில் செயல்துறை நடுவராகிய சம்மந்தப்பட்ட துணை ஆணையாளர்கள் உத்தரவின்பேரில், பிணை ஆவண த்தில் எழுதிக் கொடுத்த 1 வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் கழித்து மீதமுள்ள நாட்கள் பிணையில் வரமுடியாத சிறை தண்டனை (Bound Down) விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.