Take a fresh look at your lifestyle.

நன்னடத்தை உறுதிப்பத்திரத்தை மீறிய ரவுடி தம்பதிகளுக்கு ஜெயில்: துணைக்கமிஷனர் பகலவன் அதிரடி உத்தரவு

85

திருவல்லிக்கேணி துணைக்கமிஷனர் பகலவன் உத்தரவின்பேரில் 1 வருட கால நன்னடத்தை பிணை உறுதிமொழியை மீறி மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்ட சரித்திரி பதிவேடு குற்றவாளிகளான கணவன், மனைவி ஆகியோர் முறையே 217 நாட்கள் மற்றும் 185 நாட்கள் சிறையிலடைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை, பல்லவன் சாலை, காந்திநகர், 7வது தெருவில் வசிப்பவர் சரவணன் (42). இவரது மனைவி மாலா (39). இருவர் மீதும் கஞ்சா, அடிதடி, மதுபாட்டில்கள் விற்பனை செய்தது உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் இருவர் மீதும் சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் சரித்திர பதிவேட்டில் பெயர் பதிவாகியுள்ளது. இந்நிலையில், மாலா கடந்த 18.09.2021 அன்று திருவல்லிக்கேணி துணைக்கமிஷனர் பகலவன் முன்பு சாட்சிகளுடன் மாலா ஆஜரானார். தான் திருந்தி வாழப்போவதாகவும், 1 வருட காலத்திற்கு எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டேன் எனவும், நன்னடத்தை உறுதிமொழி பிணை பத்திரம் எழுதி கொடுத்தர்தார். மாலாவின் கணவர் சரவணன் கடந்த 25.10.2021 அன்று திருவல்லிக்கேணி துணைக்கமிஷனர் அலுவலகத்தில் துணைக்கமிஷனர் பகலவன் முன்பு ஆஜரானார். 1 வருடத்திற்கு எந்த குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டேன் என உறுதிமொழி பிணை பத்திரம் எழுதிக் கொடுத்தார்.

ஆனால், சரவணன் மற்றும் அவரது மனைவி மாலா ஆகியோர் கடந்த 16.03.2022 அன்று, வீட்டினருகே பல்லவன் சாலை, காந்திநகர் 7வது தெரு சந்திப்பில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்துள்ளனர். அது தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் இருவரையும் கைது செய்தனர். இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் மாலா மற்றும் சரவணன் ஆகியோர் 1 வருட காலத்திற்கு எந்த குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டேன் என எழுதி கொடுத்த நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறியதால் செயல்முறை நடுவர் என்ற முறையில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து துணைக்கமிஷனர் பகலவன் உத்தரவிட்டார்.

மாலா மீதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 110ன் கீழ் பிணை ஆவணத்தில் எழுதி கொடுத்த 1 வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் மற்றும் சிறையிலிருந்த நாட்கள் கழித்து 185 நாட்களும், சரவணனுக்கு கு.வி.மு.ச. பிரிவு 107ன் கீழ் பிணை ஆவணத்தில் எழுதி கொடுத்த 1 வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் மற்றும் சிறையிலிருந்த நாட்கள் கழித்து 217 நாட்களும், பிணையில் வரமுடியாத சிறை தண்டனை விதித்து கடந்த துணைக்கமிஷனர் பகலவன் உத்தரவிட்டார். அதன்பேரில், மாலா மற்றும் சரவணன் ஆகியோர் நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டனர்.
******