Take a fresh look at your lifestyle.

நடுவீரப்பட்டு கிராமத்தில் காவல் உதவி மையம்: தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் திறந்து வைத்தார்

110

சென்னை, தாம்பரம் காவல் ஆணையரகத்துக்குட்பட்ட சோமங்கலம் காவல் எல்லையில் நடுவீரப்பட்டி கிராமத்தில் காவல் உதவி மையத்தை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் திறந்து வைத்தார்.

சென்னை, தாம்பரம் காவல் ஆணையரகம், சோமங்கலம் காவல் நிலைய எல்லையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் நடுவீரப்பட்டு கிராமம் உள்ளது. எட்டயாபுரம், தர் காஸ்ட் ஆகிய 2 குக்கிராமங்களை உள்ளடக்கிய இங்கு மொத்தம் 9 வார்டுகள் உள்ளன. சுமார் 12,000 பேர் வசிக்கின்றனர். 18 குற்றப்பதிவேடு ரவுடிகள் அடங்கிய இந்த பகுதியில் காவல்துறை கண்காணிக்கும் வகையில் காவல் உதவி மையத்தை தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் நேற்று திறந்து வைத்தார்.

விழாவில் அமல்ராஜ் பேசுகையில், ‘‘சோமங்கலம் காவல் எல்லையில் நடுவீரப்பட்டி எவ்வளவு அழகான ஊர் என்பது இங்கு வந்த பார்த்த பிறகுதான் தெரிகிறது. பல ஆண்டு களுக்கு முன்பு நான் காஞ்சிபுரம் எஸ்பியாக இருந்த போது இந்த பகுதிகளுக்கு வந்துள் ளேன். நடுவீரப்பட்டி கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் குற்றங்களை களையும் வகையில் காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு தேவையான காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு நடுவீரப்பட்டியையும் அதனைச் சுற்றியுள்ள கிராமங் களிலும் தொடர் கண்காணிப்பை ஏற்படுத்தி குற்றம் நடக்காமல் பாதுகாக்கப்படும். தற்போது முதற் கட்டமாக 4 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கிராமம் முழுவதும் முக்கிய சந்திப்புக்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு சமூக விரோ திகள் கண்காணிக்கப் படுவார்கள். பொது மக்களின் அன்றாட பணிகளுக்கு இடையூறு செய்யும் ரவுடிகள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’’. இவ்வாறு அமல்ராஜ் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தாம்பரம் இணைக்கமிஷனர் மூர்த்தி, துணைக்கமிஷனர் அதிவீர பாண் டியன், மணிமங்கலம் உதவிக்கமிஷனர் ரவி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.