தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுடன் மாமன்னன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் ஜெயம் ரவியுடன் சைரன், தெலுங்கில் போலோ சங்கர் மற்றும் தசரா ஆகிய இரு திரைப்படங்களை மட்டுமே கைவசம் வைத்துள்ளார். இந்த நான்கு படங்களை தவிர்த்து வேறு எந்த ஒரு படத்தையும் இதுவரை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யவில்லை.
இதற்கு காரணம் விரைவில் நடிப்பில் இருந்து விலகி திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கப் போகிறா ராம். இதனால் தான் நடிப்பை விட்டு விலக கீர்த்தி முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாப்பிள்ளை யார் என்பது குறித்து தகவல் வெளிவரவில்லை. நடிப்பில் இருந்து விலகினாலும், தயாரிப்பில் களமிறங்கி நல்ல படங்களை தயாரிக்க முடிவெடுத்துள்ளாராம் கீர்த்தி.