1980ஆம் ஆண்டு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீபிரியா.எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், சிவக்குமார், சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் படங்களையும் இயக்கியுள்ளார்.நடிகை ஸ்ரீபிரியாவின் தாயார் குடந்தை கிரிஜா பக்கிரிசாமி வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார். இவர் காதோடு தான் பேசுவேன் என்ற படத்தை இயக்கியுள்ளதோடு, நீயா உள்ளிட்ட படங்களை தயாரித்தும் உள்ளார். கிரிஜா அவர்களின் இறுதிச்சடங்கு இன்று மாலை மயிலாப்பூரில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.