Take a fresh look at your lifestyle.

நடிகர் மயில்சாமி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல் செய்தி

68

நடிகர் மயில்சாமியின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பால் இன்று அதிகாலை உயிரிழந்தார். மயில்சாமியின் திடீர் மறைவு அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத் தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகர் மயில்சாமியின் மறைவுக்கு முதல்-வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நடிகர் மயில்சாமி மறைந்தார் என்ற துயர்மிகு செய்தியறிந்து வருந்தினேன். பல குரல் களில் நகைச்சுவையாக பேசும் மயில்சாமி, தனது ஒலிநாடாக்கள் மூலம் அறிமுகமானவர். காமெடி டைம் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களின் இல்லங்களில் ஒருவராகவே பார்க் கப்பட்டவர். திரையுலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த நடிகர் மயில்சாமியின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது” என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.