Take a fresh look at your lifestyle.

நடிகர் மயில்சாமி உடல் தகனம்

62

மாரடைப்பால் காலமான சினிமா காமெடி நடிகர் மயில்சாமியின் உடல் இன்று பகல் 12 மணி அளவில் வடபழனி ஏ.வி.எம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் திரையுலகினர், ரசிகர்கள், பொதுமக்கள் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். சாலிகிராமம் வெங்கடேஸ்வரா நகரில் உள்ள மயில்சாமியின் வீட்டில் இருந்து புறப்பட்ட அவரது இறுதி ஊர்வலத்தில் திரையுலக பிரமுகர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் கண்ணீர்மல்க பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தினார்கள். ஊர்வலம் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. வழிநெடுக பொதுமக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். மயில்சாமி சிவபக்தர் என்பதால் அவருக்கு கைலாய வாத்தியம் இசைத்து மரியாதை செய்யப்பட்டது. மயில்சாமி உடல்லுக்கு அவரது மகன் முறைப்படி இறுதி சடங்கு செய்தார். அதன் பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.