சென்னை, பட்டாபிராம், அணைக்கட்டு சேரியைச் சேர்ந்தவர் ஞானமூர்த்தி (வயது 43). இவரது வீட்டில் இருந்த 4 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ. 40 ஆயிரம் திருடு போனதாக புகார் அளித்தார். இது தொடர்பாக, பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதனையடுத்து போலீசார் விக்னேஷ் என்கிற பல்லு விக்கி (26), மணிகண்டன் (வயது 26) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வழக்கு விசாரணை திருவள்ளூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்தது. போலீசார் சரியான சாட்சிகளுடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததையடுத்து கோர்ட்டில் வழக்கு விசாரணை முடிந்து நேற்று நீதிபதி தீர்ப்பளிக்கப்பட்டது. அதனையடுத்து விக்னேஷ் என்கிற பல்லு விக்கிக்கு 102 நாட்கள் சிறை தண்டணை மற்றும் ரூ. 500- அபராதம் மற்றும் 2வது எதிரி மணிகண்டன் (26) என்பவருக்கு 60 நாட்கள் சிறை தண்டணை மற்றும் ரூ. 500- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அதனடிப்படையில் எதிரிகள் 2 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் சிறப்பாக புலனாய்வு மேற்கொண்ட பட்டாபிராம் உதவி ஆய்வாளர் வடிவேல் மற்றும் தற்போதைய ஆய்வாளர் பிரிதிவிராஜ் ஆகியோரை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் வெகுவாக பாராட்டினார்.