தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 16 ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்றும், நாளையும் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 14ந் தேதி முதல் தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும். மேலும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 16 ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.