துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தால் துருக்கி மற்றும் அதன் அண்டை நாடான சிரியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில் உள்நாட்டுப் போர், போதிய மருத்துவக் கட்டமைப்பு வசதியில்லாத சிரியாவின் நிலை மிக மோசமாக உள்ளதால் அங்குள்ள மக்கள் இந்த பூகம்பத்தால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஏற்கெனவே போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவிற்கு நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்ப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதை ஒப்புக் கொண்டுள்ள ஐ.நா. சபை, இந்த பூகம்பத்தால் உயிரிழப்பு 70 ஆயிரத்தையும் கூட கடக்கலாம் என்று அச்சம் தெரிவித் துள்ளது. இந்நிலையில் துருக்கியில் நேற்றைய தினம் கர்ப்பிணிப் பெண், சிறு குழந்தைகள் எனப் பலரும் 6 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.