Take a fresh look at your lifestyle.

துருக்கியில் தாயுடன் சேர்ந்து உயிருடன் மீட்கப்பட்ட 10 நாள் சிசு

99

இஸ்தான்புல், பிப்.11

பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை தாயுடன் சேர்ந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

நெஞ்சைக் கவ்வும் துருக்கி நிலநடுக்க சோகத்துக்கு நடுவில் இந்த சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள நகரம் காசியான்டெப் நகரத்தில் திங்கட்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை இன்று வரை 24 ஆயிரத்தை கடந்துள்ளது. நிலநடுக்கத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதில், பலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கட்டிட இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. இடிபாடு களுக்குள் சிக்கிய அந்த பச்சிளம் குழந்தை 90 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்கப் பட்டுள்ளது. யாஹிஸ் உலஸ் என்ற அந்த பச்சிளம் குழந்தையின் தாயாரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அக்குழந்தை ஆண், பெயர்: யாகிஸ் உலாஸ்.

‘இன்ஷா.. அல்லா,  இன்ஷா.. அல்லா என்ற சத்தம் முனகல் ஒலியோடு ஒலித்ததைக் கேட்ட மீட்புப் படையினர் உஷார் அடைந்து தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, முடிவில் தாயையும், பச்சிளம் சிசுவையும் கண்டுபிடித்து உயிரோடு மீட்டனர். ஸ்ட்ரச்சரில் வைத்து உடனடியாக தாயும் சேயும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.