துணை ஆணையர்கள் விஜயகுமார், ஜோஷ் தங்கையா உள்ளிட்ட 100 போலீசாருக்கு தமிழக அரசின் அண்ணா விருது
vijayakumar ips and deputy cop josh thangaiya iclude 100 police officials got anna medal
சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் விஜயகுமார், பள்ளிக்கரணை துணை ஆணையர் ஜோஷ் தங்கையா உள்ளிடட் 100 போலீசாருக்கு தமிழக அரசின் அண்ணா விருது வழங்கப்பட்டுள்ளது.
அண்ணாநகர் துணைக்கமிஷனர் விஜயகுமார்
அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதியன்று அண்ணா சிறப்பு விருது தமிழக காவல்துறையில் சிறப்பாக பணிபுரியும் காவல் அதிகாரிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. நாளை அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு இந்த விருது 9 எஸ்பிக்கள் உள்பட 100 போலீசாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கரணை துணைக்கமிஷனர் ஜோஷ் தங்கையா
அது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் ‘‘சென்னை அண்ணாநகர் துணைக்கமிஷனர் விஜயகுமார், பள்ளிக்கரணை துணைக்கமிஷனர் ஜோஷ் தங்கையா, டிஜிபி அலுவலக தலைமையிட உதவி ஐஜி துரை, சிபிசிஐடி எஸ்பி ஜியாவுல் ஹக்,
பெண்கள் குழந்தைகள் குற்றத்தடுப்புப்பிரிவு துணைக்கமிஷனர் ஷியாமளாதேவி, ஆவடி போக்குவரத்து துணைக்கமிஷனர் அசோக்குமார், சென்னை நகர நுண்ணறிவுப்பிரிவு துணைக்கமிஷனர் சக்திவேல், சென்னை கொளத்தூர் துணைக்கமிஷனர் ராஜாராம், மதுரை மாநகர துணைக்கமிஷனர் சீனிவாசப்பெருமாள் ஆகிய 9 எஸ்பிக்கள் அண்ணாவிருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் நீலகிரி தலைமையிட கூடுதல் எஸ்பி கிருஷ்ணமூர்த்தி மற்றும் லஞ்ச ஒழிப்புப்பிரிவு டிஎஸ்பி லவக்குமார் உள்பட 5 டிஎஸ்பிக்கள், 20 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 100 போலீசாருக்கு அண்ணாவிருது வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.