Take a fresh look at your lifestyle.

துணிவு ரிலீஸ்: லாரி மீது ஏறி நடனம் ஆடிய அஜித் ரசிகர் பலி

68

நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் இன்று முதல் திரையரங்குகளில் வெளியிடப் பட்டது. சென்னையில் ரோகினி திரையரங்கில் துணிவு படம் பார்க்க வந்த அஜித் ரசிகர் ஒருவர் திரையரங்கின் முன்பு சாலையில் சென்ற லாரி மீது ஏறி நின்று நடனமாடியபோது கீழே விழுந்து உயிரிழந்தார். முதுகு தண்டில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த அஜித் ரசிகர் சிந்தாதிரிபேட்டையை சேர்ந்த 19 வயது ஆன பரத்குமார் என தெரியவந்துள்ளது. விபத்து குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.