Take a fresh look at your lifestyle.

சென்னை தீவுத்திடலில் காவல்துறை அரங்கம்: கமிஷனர் சங்கர்ஜிவால் பார்வையிட்டார்

37

சென்னை தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள காவல்துறை அரங்கத்தை கமிஷனர் சங்கர்ஜிவால் பார்வையிட்டார்.

47வது இந்திய சுற்றுலா மற்றும் தொழிற் பொருட்காட்சி தமிழக சுற்றுலாத்துறை, சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்கள் நேற்று (04.01.2023) சென்னை தீவுத்திடலில் திறந்து வைத்தனர். இந்தப் பொருட்காட்சியில் பல அரசு துறைகளைச் சேர்ந்த அரங்குகள் நிறுவப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாடு காவல்துறை அரங்கமும் அமைந்துள்ளது. சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் இன்று மாலை தமிழ்நாடு காவல்துறை அரங்கை பார்வையிட்டு ஆய்வு செய்து காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

தமிழ்நாடு காவல்துறை அரங்கில் காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகம், (Office of the Director General of Police) சென்னை பெருநகர காவல், பேரிடர் மீட்பு குழு, மத்திய குற்றப் பிரிவு (CCB), போக்குவரத்து காவல் (GCTP), ஆயுதப்படை பிரிவு (Armed Reserve Police), கடலோர பாதுகாப்பு குழுமம், (Coastal Security Groub) தமிழ்நாடு அரசு இருப்பு பாதை காவல், (TNGRP) பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு (CAWC), தமிழ்நாடு சிறப்பு காவல் படை (TSP), தமிழ்நாடு கமாண்டோ படை மற்றும் பள்ளி (Tamil Nadu Commando Force & School,) தடய அறிவியல் துறை, (Forensic Science Department) தமிழ்நாடு குற்ற ஆவண காப்பகம் (SCRBB), தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகம் (TNPHC), சிலை திருட்டு தடுப்பு பிரிவு, (Idol Wing) பொருளாதார குற்றப்பிரிவு (EOW), அமலாக்க பணியகம் குற்றப்புலனாய்வு துறை (Enforcement Bureau), தொழில்நுட்ப சேவைகள் (Technical Services), காவலர் பயிற்சி கல்லூரி (Police Training College), தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) என மொத்தம் 18 க்கும் மேற்பட்ட கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் சுழற்சி முறையில் இதர காவல்துறை பிரிவுகளும் இந்த அரங்கில் இடம்பெற உள்ளது. காவல்துறை அரங்கத்தை பார்வையிட வரும் பொதுமக்கள் மற்றும் குழந்தை களை உற்சாகப்படுத்த புதிதாக பேசும் போலீஸ் பொம்மைகள் அரங்கினுள் நிறுவப் பட்டுள்ளன. மேலும் தொடு திரை மூலம் காவல் துறை தொடர்பான தகவல்களை பொது மக்கள் எளிதாக தெரிந்து கொள்ள KIOSK தொடு திரை வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றி விழிப்புணர்வு வாசகங்கள், புகைப்படங்கள், சமூக வலைதள குற்றங்கள், சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள், புகைப்படங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காவல் துறையினர் பயன்படுத்தும் நவீன துப்பாக்கிகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் காவல் துறையினரின் சாதனைகள் மற்றும் சிறப்புகள் பற்றிய புகைப்பட தொகுப் புகள் அரங்கிற்குள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அரங்கிற்கு வெளியே முகப்பில் 2 அகன்ற திரைகளில் தமிழக காவல் துறையின் சாதனைகள் மற்றும் சிறப்புகள் காணொளி வாயி லாக ஒளிப்பரப்படுகிறது. சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் தமிழக காவல் துறை மோப்ப நாய் படை பிரிவு சார்பில் மோப்ப நாய் சாகச நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. மேலும் ரோபோ மூலம் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு உண்டாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையாளர் தலைமையிடம் முனைவர் லோகநாதன், துணை ஆணையாளர்கள் ஆல்பர்ட் ஜான் (பூக்கடை), ஆரோக்யம் (நவீன காவல் கட்டுப்பாட்டு அறை), சவுந்திரராஜன் (ஆயுதப்படை-1), ராதாகிருஷ்ணன் (ஆயுதப்படை-2), கோபால் (மோட்டார் வாகன பிரிவு) மற்றும் காவல் அதிகரிகள் கலந்து கொண்டனர்.