கன்னியாகுமரி மாவட்டம், திருவிலாங்கோட்டில் நபிகள் நாயகத்தின் மீது 100 கோடி ஸலவாத் சமர்ப்பண மாநாடு விமரிசையாக நடந்தது.
நபிகள் நாயகத்தின் மீது ஸலவாத் ஓதி சமர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் எஸ்எஸ்எப் அமைப்பின் மூலம் நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி, காயல்பட்டினத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி மாவட்டம், திருவிலாங்கோட்டில் உள்ள மாலிக் அப்பா திடலில் நேற்று முன்தினம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் மவ்லானா மவ்லவி செய்யித் அப்துர் ரஹ்மான் பாகவீ (தங்கள்), மவ்லானா மவ்லவி முஹம்மத் சலீம் சிராஜி, மவ்லானா மவ்லவி அபூசாலிஹ் ஹஜ்ரத், மவ்லானா மவ்லவி தாஜுத்தீன் அஹ்ஸனீ, மவ்லானா மவ்லவி எம். நிஜாமுத்தீன் அஹ்ஸனீ, மவ்லானா மவ்லவி கமாலுத்தீன் ஸகாபீ, மவ்லானா மவ்லவி M. முஹம்மத் அன்வரீ ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஓதிய கோடிக்கணக்கான ஸலவாத்துக்களை சமர்ப்பணம் செய்யும் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவின் இறுதியில் உலக மக்கள் அனைவரின் நலனுக்காக டிஎம்ஜே அமைப்பின் மாநிலத் தலைவர் நபிகள் நாயகத்தின் வம்சாவழியைச் சேர்ந்த எஸ். செய்யித் அப்துர் ரஹ்மான் அபூர்வ பிரார்த்தனை செய்து நிகழ்வினை நிறைவு செய்தார். இந்நிகழ்ச்சி குறித்த தகவல்களை செய்தித் தொடர்பாளர் காயல் ஜெஸ்முதீன் தொகுத்தளித்தார்.