சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா எடுத்து வந்த ஒரு பெண் உட்பட 2 நபர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
திருவல்லிக்கேணி போலீசார் துணைக்கமிஷனர் தேஷ்முக் சேகர் மேற்பார்வையில் நேற்று (20.09.2022) மதியம், திருவல்லிக்கேணி, அண்ணாசாலை மற்றும் வாலாஜா சாலை சந்திப்பு அருகே வாகனத் தணிக்கையில் இருந்தனர். அப்போது அந்த வழியாக ஆட்டோவில் வந்த பெண்ணை மடக்கி விசாரணை செய்தனர். அப்போது அவர் கஞ்சா விற்பது தெரியவந்தது.
விசாரணையில் மேற்படி பெண் ஆட்டோவில் சவாரியாக செல்வது போல கஞ்சா எடுத்து வந்ததும், ஆட்டோவை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர் கஞ்சா எடுத்து வந்ததும் தெரியவந்தது. அதன்பேரில், ஆட்டோவை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் கஞ்சா எடுத்து வந்த நபரான ஜாம்பஜார் பக்கீர் சாஹிப் தெருவைச் சேர்ந்த ரஹ்மான் (24), எல்லிஸ் ரோட்டைச் சேர்ந்த குல்னாஸ் (34) ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, மொத்தம் 4 கிலோ கஞ்சா, பணம் ரூ.9,130- மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும், விசாரணைக்குப் பின்னர் நேற்று (20.09.2022) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.