Take a fresh look at your lifestyle.

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளைக்கும்பல் தலைவன் ஹரியானாவில் கைது: ரொக்கம், வாகனம் பறிமுதல்

38

கடந்த 12.02.2023-ந் தேதி அதிகாலை திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம், போளூர் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏடிஎம் மையங்களில் கேஸ் கட்டிங் இயந்திரத்தை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து ரூபாய் 72,79,000- பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். இது தொடர்பாக தகவல் கிடைத்ததும் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் டாக்டர் கண்ணன் மேற்பார்வையில், வேலூர் சரக டிஐஜி முத்துசாமி தலை மையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அது தொடர்பாக போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், இந்தச் சம்பவத்தில், வெளிமாநிலத்தை சேர்ந்த 6 பேர்களுக்கும் மேற்பட்ட வர்கள் ஈடுபட்டதும், அவர்கள் கர்நாடகா மாநிலம் கோலார் பகுதியில் தங்கியிருந்து குற்றம் நடந்த பகுதிகளை ஏற்கனவே நோட்டமிட்டு அதன் பின்பு கொள்ளையில் ஈடுபட்ட தும் தெரியவந்தது.

ஆசாத்

இதன் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்ட எஸ்பி பிசி கல்யாண் ஆந்திர மாநிலத்திற்கும், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் குஜராத் மாநிலத்திற்கும், திருவண்ணாமலை எஸ்பி கார்த்திகேயன் ஹரியானா மாநிலத்திற்கும், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், கர்நாடகா மாநிலத்திற்கும் தங்களது தனிப்படைகளுடன் விரைந்தனர். ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி தடய அறிவியல் சம்மந்தப்பட்ட புலன் விசாரணை ஒப்படைக்கப்பட்டது. தீவிர தேடுதல் வேட்டையின் காரணமாக அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் ஏடிஎம் கொள்ளையர்கள் முகமது ஆரிப் (வயது 35), ஆசாத் (வயது 37) ஆகிய இருவரையும் ஹரியானா மாநிலத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஆரிப் கொள்ளை கும்பல் தலைவனாக இருந்து செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.

முகமது ஆரிப்

மேலும் குற்றவாளிகள் திருடிச்சென்ற பணத்திலிருந்து ரூபாய், 3 லட்சம் பணம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். குற்ற வாளிகளுடன் தனிப்படை போலீசார் டெல்லியிலிருந்து திருவண்ணாமலைக்கு விரைந்து வந்து கொண்டிருக்கின்றனர். மற்ற குற்றவாளிகளையும் கைது செய்ய பல்வேறு பகுதிக ளில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.