Take a fresh look at your lifestyle.

திருமண வீட்டில் காஸ் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி

79

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் திருமண வீட்டில் காஸ் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நேற்று மணமகன் வீட்டில் நடைபெற்ற திருமண விருந்து தயாரிக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த 2 கியாஸ் சிலிண்டர்கள் திடீரென வெடித்து சிதறியது. இதில் 2 குழந்தைகள் உடப்ட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சுமார் 50 பேர் காயமடைந்தனர். ஜோத்பூரில் இருந்து 60 கிமீ தொலைவில் உள்ள புங்ரா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிலிண்டர் வெடித்ததன் காரணமாக வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. காயமடைந்தவர்களில் சிலருக்கு 80 முதல் 100 சதவீதம் தீக்காயம் ஏற் பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ரத்தன் சிங் (5), குஷ்பு (4) ஆகிய இரு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தீக்காயம் அடைந்தவர்கள் சிகிச்சை க்காக உள்ளூர் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்த 60 பேரில் 42 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து தகவல் அறிந்த முதல்வர் அசோக் கெலாட் மற்றும் மத்திய அமைச்சரும் ஜோத்பூர் எம்பியுமான கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து ள்ளனர். மேலும் காயம டைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.