Take a fresh look at your lifestyle.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம்

64

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 12 ந்தேதி தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்த நாளை முன்னிட்டு புதுப்பொலிவுடன் வெளியிடப்பட்ட பாபா திரைப்படமும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக் கொண்டி ருக்கிறது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய் வதற்காக நடிகர் ரஜினிகாந்த் அவரது மகள் ஐஸ்வர்யா இருவரும் நேற்று திருமலைக்கு வந்தனர். அங்கு கூடிய ரசிகர்கள் ரஜினியுடன் செல்பி எடுக்க முயன்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து, தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறைக்கு ரஜினி அழைத்து செல்லப்பட்டார். திருமலையில் உள்ள டி.எஸ்.ஆர். விருந்தினர் மாளிகையில் இரவு தங் கினர். இன்று அதிகாலை ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற சுப்ரபாத சேவையில் மகள் ஐஸ்வர்யாவுடன் ரஜினி சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோவிலுக்கு வந்த ரஜினியை தேவசம் போர்டு செயல் அதிகாரி தர்மா ரெட்டி வரவேற்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் ரஜினி பேசுகையில், 6 ஆண்டுகளுக்கு பிறகு ஏழுமலையானை தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். அப்போது அவரிடம் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த ரஜினி, உதயநிதிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்தார். திருப்பதியை தொடர்ந்து, ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள அமீன் பீர் தர்காவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வந்தார். பின்னர் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுடன் சேர்ந்து அங்கு அவர் பிரார்த்தனை செய்தார்.