Take a fresh look at your lifestyle.

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு 12 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு

39

தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி மர்ம நபர்களால் கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். திருச்சி போலீஸ் கமிஷனரின் எல்லைக்குட்பட்ட இந்த கொலை வழக்கில் 10 ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இதற்கிடையே இந்த கொலை வழக்கை விசாரணை நடத்த சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுப் பிரிவு எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் பிரபல ரவுடிகள் 12 பேர் மீது உண்மை கண்டறியும் சோதனை செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தின் பிரபல ரவுடிகள் 12 நபர்களான திண்டுக்கல் மோகன்ராம், சாமி ரவி, நரைமுடி கணேசன், சீர்காழி சத்யராஜ், மாரிமுத்து, தினேஷ், திலீப் என்கிற லட்சுமி நாராயணன், தென்கோவன் என்கிற சண்முகம், ராஜ்குமார், சுரேந்தர், சிவகுணசேகரன், கலைவாணன் உள்ளிட்டவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடைபெற உள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.