Take a fresh look at your lifestyle.

திமுகவின் குருகுலம் ஈரோடு முதல்வர் ஸ்டாலின் பேச்சு

65

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு வரும் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து முதல்-வர் ஸ்டாலின் சம்பத் நகரில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும் போது கூறியதாவது , கலைஞர் பிறந்தது திருவாரூராக இருந்தாலும் குருகுலமாக இருந்தது ஈரோடு. சம்பத் நகரில், ஈ.வி.கே.எஸ். சம்பத் மகனுக்கு வாக்கு சேகரித்து கலைஞர் மகன் வந்துள்ளேன். திமுகவின் அடித்தளமே ஈரோடு தான், மகனின் கடமையை செய்து முடிக்க தந்தை வந்துள்ளார். குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1000 உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என மார்ச் மாதம் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என்றார். எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் தான் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதிமுக வேட்பாளர் டெபாசிட் இழக்கும் அளவுக்கு உங்கள் ஆதரவு இருக்க வேண்டும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே எனது லட்சியம் என்றார்.