சென்னை தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட தாழம்பூர் காவல் எல்லையில் புறக்காவல் நிலையத்தை கமிஷனர் அமல்ராஜ் திறந்து வைத்தார்.
சென்னையை அடுத்த தாழம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்டபட்ட வேங்கடமங்களம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களின் பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்கும்படி தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் கோரிக்கை அளித்தனர். அதன்படி கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், பள்ளிக்கரணை துணைக்கமிஷனர் ஜோஷ் தங்கையா மேற்பார்வையில் வேங்கட மங்களம் அகரம் தென் சந்திப்பு சாலையில் புறக்காவல் நிலையம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கண்டிகை சாலை, அகரம்தென் சந்திப்பு சாலை, பொன்மார் சாலை, வேங்கடபெருமாள் கோவில், ஊராட்சி மன்ற அலுவலகம், வேங்கடமங்களம்
தைலதோப்பு பஸ் ஸ்டாப், ஏரிக்கரை இடங்களில் 4 ஏன்பிஆர் கேமராக்கள் உட்பட 100 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து நேற்று வேங்கடமங்களம் புறக்காவல் நிலையத்தை கமிஷனர் அமல்ராஜ் திறந்து வைத்தார். பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் இல்லாத இடங்களை கணக்கிட்டு பொது மக்கள் உதவியுடன் அவற்றை அங்கு விரைவில் நிறுவும்படி கமிஷனர் அமல்ராஜ் கேட்டுக் கொண்டார்.