Take a fresh look at your lifestyle.

தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி உள்பட 4 ஏடிஜிபிக்களுக்கு டிஜிபியாக பதவி உயர்வு

85

சென்னை, தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி உள்பட 4 ஏடிஜிபிக்கள் டிஜிபிக்களாக இன்று பதவி உயர்ந்தனர். அதற்கான உத்தரவை தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ளார்.

அந்த உத்தரவு விவரம்: தமிழக காவல்துறை சைபர்கிரைம் பிரிவு கூடுதல் டிஜிபி அமரேஷ் புஜாரி அங்கேயே டிஜிபியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். தாம்பரம் போலீஸ் கமிஷனராக உள்ள ஏடிஜிபி ரவி டிஜிபியாக பதவி உயர்ந்து அங்கேயே அமர்த்தப்பட்டுள்ளார்.

அதே போல தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி, டெல்லிப்பணியில் உள்ள கருணாசாகர் ஆகிய இரண்டு ஏடிஜிபிக்களும் தாங்கள் வகிக்கும் பதவிகளிலேயே டிஜிபிக்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.