சென்னை, தாம்பரம் காவல் ஆணையரகத்தில் இ சலான் திட்டம் மற்றும் எல்இடி சிக்னல்களின் இயக்கத்தை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் துவங்கி வைத்தார்.
சென்னை, தாம்பரம் காவல் ஆணையரகத்தில் போக்குவரத்து விதி மீறல்களுக்கான நேரடி அபராதம் செலுத்தும் இ சலான் திட்ட மற்றும் தாம்பரம் மெப்ஸ் உள்ளிட்ட இடங்களில் போக்கு வரத்து எல்இடி சிக்னல் மற்றும் சிசிடிவி, ஏஎன்பிஆர் கேமராக்கள் இயக்கத்தை கமிஷனர் அமல்ராஜ் துவங்கி வைத்தார்.
இது குறித்து கமிஷனர் அமல்ராஜ் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘டில்லியில் உள்ள நேஷனல் இன்பர்மேட்டிக் சென்டர் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த இ சலான் இயந்திரம் இணை யம் வழியாக செயல்படக்கூடியது. மேலும் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், வாகன பதிவிற்கான வாகன் (vahan) இணையதளத்துடனும், ஓட்டுனர் உரிமத்திற்கான சாரதி (sarathy) இணையதளத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகனத்தின் உரிமை யாளர் மற்றும் ஓட்டு னர் உரிமம் ஆகியவற்றின் உண்மை தன்மை உறுதி செய்யப்படும். மேலும் இந்த புதிய மென்பொருள் மூலம் பிற மாநிலங்களை சேர்ந்த வாகன ங்கள் மீதும் வழக்குகள் பதியலாம். அந்த வழக்குகள் அபராதம் செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்தால், இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலக ங்களிலும் Fitness certificate (FC), உரிமையாளர் பெயர் மாற்றம் (Ownership Transfer), Hypothecation Cancellation போன்ற எந்த சேவைகளையும் பெற இயலாது. மேலும் போக்குவரத்து அதிகா ரிகள் வழக்குகள் பதியும் போதே விதிமீறலில் ஈடுப்பட்டவர்களின் ஓட்டுனர் உரிமங்களை தற்காலிகமாக தகுதி நீக்கம் செய்ய பரிந்துறை செய்யும் வசதியும் இதில் உள்ளது’’ என தெரிவித்தார்.
போக்குவரத்து காவல் அதிகாரியிடம் உள்ள இயந்திரத்தின் மூலமாகவும், பாரத ஸ்டேட் (SBI Online) இணையதள வங்கி பரிவர்த்தனை வழியாகவும், வழியாகவும், அஞ்சல் நிலையங்கள் (Post Office) மூலமாகவும், தமிழ்நாடு E-சேவை மையம் மூலமாகவும் மற்றும் பேடிஎம் (Paytm), வழியாகவும் செலுத்தலாம். 01.01.2022 அன்று துவங்கப்பட்ட தாம்பரம் மாநகர காவல் ஆணை யகரத்தில் சாலை விபத்துக்களை தடுக்கும் பொருட்டு சாலை விதிகளை மீறுபவர்கள் மீது மோட்டார் மீது மோட்டார் வாகன சிறு குறு வழக்குகள் 2,29,452
பதியப்பட்டு ரூபாய் 2,13,63,000- அபராதத்தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 01.01.2022 முதல் 31.12.2022 முடிய ஒருவருடத்தில் 408 சாலை விபத்து மரண வழக்குகள் பதியப்பட்டு 418 நபர்கள் மரணித்துள்ளனர். மேலும் சாலைவிபத்து காயவழக்குகள் 1136 பதியப்பட்டு 1456 நபர்கள் காயமடைந்து உள்ளனர்.