Take a fresh look at your lifestyle.

தாம்பரம் காவல் ஆணையரகத்தில் வாகனங்கள் ஏலம்

77

தாம்பரம் மாநகர காவல், தாம்பரம் காவல் மாவட்டம், தாம்பரம் காவல் சரக எல்லைக் குட் பட்ட ஆங்காங்கே நீண்ட நாட்களாக கேட்பாரற்று கிடந்த மற்றும் கைவிடப்பட்ட 97 இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு மூன்று சக்கர வாகனம் உட்பட 98 வாகனங்கள் கைப்பற்ற ப்பட்டு வழக்கு பதிவு செய்து, செங்கல்பட்டு மாவட்ட அரசிதழ் எண்.34-ல் 28.09.2022 ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்த வாகனங்கள், உள்ளது உள்ள நிலையில் (AS IS WHERE IS CONDITION) T2 குரோம்பேட்டை காவல் நிலையத்தில் பகிரங்க ஏலம் மூலம் Scrab-க்கு விற்பனை செய்யபட உள்ளது. மேலும் இந்த ஏலத்தில் கலந்துகொள்ள உள்ள ஏலதாரர்கள் தங்களது அடை

யாள அட்டை மற்றும் GST பதிவு எண் ஆதாரங்களுடன் T2 குரோம்பேட்டை காவல் நிலையத்தில் 27.01.2023 அன்று காலை 10.00 மணி முதல் 2 மணிக்குள் வந்து முன்பதிவு கட்டணம் ரூபாய் 500 செலுத்தி தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் பதிவு செய்த ஏலதாரர்கள் ஏலக்குழுவினர் முன்னிலையில், 31.01.2023 அன்று காலை 11.00 மணிக்கு குரோம்பேட்டை காவல் நிலையத்தில் பகிரங்க ஏலத்தில் கலந்துகொள்ளவும். மேலும் பதிவு செய்த நபர்கள் மட்டுமே பகிரங்க ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட வாகனத்திற்கான ஏலத்தொகையை அன்றய தினமே 100% சதவீதம் செலுத்த வேண்டும், அதற்கான GSTகட்டணம் செலுத்திய பின்பு விற்பனை ஆணை வழங்கப்படும்.