Take a fresh look at your lifestyle.

தலைமைச் செயலகம் அருகில் கஞ்சா விற்ற கணவன் மனைவி உள்பட 3 பேர் கைது

62

சென்னை, தலைமைச் செயலகம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்தது தொடர்பான 2 வழக்குகளில் கணவன், மனைவி உட்பட 3 நபர்களை போலீசார் கைது செய்து 1.5 கிலோ கஞ்சா மற்றும் ரூ.8,500/- பறிமுதல் செய்தனர்.

கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (11.12.2022) காலை, அன்னை சத்யா நகர், C பிளாக் பகுதியில் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது, அங்கு 2 பெண்கள் உட்பட 3 நபர்கள் ரகசியமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. உடனே காவல் குழுவினர் அவர்களை பிடிக்க சென்றபோது, ஒரு பெண் தப்பியோடிவிட்டார். பிடிபட்டவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (37) அவரது மனைவி மங்கல லஷ்மி (31) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1.25 கிலோ கஞ்சா மற்றும் ரூ. 8,500 பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நேற்று (11.12.2022) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். தப்பிச் சென்ற சாந்தி என்பவரை பிடிக்க காவல் குழுவினர் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அன்னை சத்யா நகர் பகுதியில் ரகசியமாக கஞ்சா விற்ற கீர்த்தனா (22) என்ற பெண்ணை கைது செய்து அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.