முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தலைமைச் செயலகத்தில், சுவிஸ்சர்லாந்து நாட்டின் டாவோசில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றக் கூட்டம் குறித்தும், தமிழ்நாட்டில் புதிய தொழில்களை மேற்கொள்வது குறித்தும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றம் தலைமைச் செயல் அலுவலர் பூஜா குல்கர்னி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.