Take a fresh look at your lifestyle.

தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் நற்சான்றிதழ் வழங்கி ஊக்குவிப்பு

110

சென்னை நகரில் இருசக்கரவாகனத்தில் தலைக்கவசம் அணிந்து பயணித்த ஓட்டுநர் களுக்கும், பின் இருக்கையில் தலைக்கவசம் அணிந்து பயணித்த நபர்களுக்கும் போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் நற்சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

சென்னை நகரில் சாலை விபத்துகளை குறைப்பதற்காக காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களிடம் மொத்தம் 10 லட்சத்துக்கு 8 ஆயிரத்து 528 வழக்குகள் போக்குவரத்து காவல்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 9,50,702 வழக்குகள் ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டிய வர்கள், மீதம் 57 ஆயிரத்து 826 வழக்குகள் பின்னிருக்கையில் ஹெல்மட் அணியாமல் பயணம் செய்த வர்கள். இந்த வகையில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், ஹெல்மெட் அணிந்து செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் கமிஷனர் சங்கர்ஜிவால் நேற்று ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அதன்படி நேற்று சென்னை, போலீஸ் கமிஷனர் அலுவலவகம், வேப்பேரி சிக்னல் சந்திப் பில், இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து பயணம் செய்தவர்களுக்கும், பின் இருக்கையில் தலைக்கவசம் அணிந்து பயணம் செய்தவர்களுக்கும் கமிஷனர் சங்கர் ஜிவால் நேரில் சந்தித்து பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். போக்குவரத்து விதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஹெல்மெட் அணியும் பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில் சென்னை நகர காவல் எல்லை முழுவதும், ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் 100 பாராட்டுச் சான்றிதழ்கள் வீதம் மொத்தம் 5,600 சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளதாக சென்னை நகர காவல்துறை தெரிவித்துள்ளது. சான்றிதழ் பெறுபவர்கள் ஹெல்மெட் அணிவதைத் தொடரவும், மற்ற போக்குவரத்து விதிகள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றவும் இந்த நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சென்னை நகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில்குமார் சி. சரத்கர், இணைக்கமிஷனர் மயில்வாகனன் மற்றும் வாகன ஓட்டிகள் கலந்து கொண்டனர்.