Take a fresh look at your lifestyle.

தமிழ்நாடு காவல் அமலாக்கப்பிரிவு நடத்தும் நூதன போதை விழிப்புணர்வு போட்டி

107

தமிழக காவல்துறையில் அமலாக்கப்பிரிவு போலீசார் தமிழகம் முழுவதும் போதைப்பொருள் நடமாட்டத்தை ஒழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் மேற்பார்வையில் அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் கஞ்சா கடத்தல், குட்கா, போதை மாத்திரை மற்றும் கள்ளச்சந்தையில் டாஸ் மாக் சரக்குகளை விற்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், போதைப் புழக்கத்தை அறவே ஒழிக்கும் வகையில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதியன்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமலாக்கப்பிரிவு சார்பில் போதைப் பொருள் ஒருங்கிணைந்த இயக்கம் தொடங்கப்பட்டது. மாநிலம் முழுவதும் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் நடத்தப்பட்ட உறுதிமொழியில் சுமார் 74 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். இது உலக சாதனை சங்கத்தால் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் விழிப்புணர்வு கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக 14,000 போதைப்பொருள் எதிர்ப்பு குழுக்கள் (Anti-Drug Clubs) உருவாக்கப் பட்டுள்ளது. சமூக ஊடகங்களான Facebook (Drive Against Drugs – DAD), Twitter Instagram (enforcementbureautn) ஆகியவற்றின் மூலம் அமலாக்கப் (@drugfreetn) and பணியகம் பொது மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த கிரியேட்டிவ் ரீல்கள், மீம்ஸ்கள் மற்றும் செய்திகளை வெளியிடுகின்றது.

தற்போது, தமிழ்நாடு காவல் அமலாக்கத்துறை போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஒரு புது முயற்சியில் இறங்கியுள்ளது. போதை ஒழிப்பை தீவிரமாக அமல்படுத்துவதற்காக ஒரு புதிய போட்டியை ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் அறிவித்துள்ளார். ‘கானா’, மாணவர்கள், இளைஞர்கள் ‘ரீல்ஸ்’ மற்றும் ‘ரீமிக்ஸ்’ பாடல்களை தயாரித்து அதனை இமெயில் மூலம் அமலாக்கப்பிரிவு காவல்துறைக்கு அனுப்ப வேண்டும். அவர்கள் அனுப்பும் கருப்பொருள் போதைப்பொருள் பிரயோகத்திற்கு எதிரானதாக இருக்க வேண்டும் (Theme of entries should be Ant-Drug Abuse). கானா, ரீல்ஸ் மற்றும் ரீமிக்ஸ் ஆகியவற்றிற்கான தங்கள் பதிவுகளை nibcidcyber@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இம்மாதம் 15ம் தேதிக்குள் னுப்ப வேண்டும். மாணவர்கள் பொதுமக்கள் என யார் வேண்டுமாலும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு போட்டியிலும் பொதுமக்கள் வெற்றிபெறும் மூன்று பேருக்கு முதல் பரிசாக தலா ரூ. 25,000-, 2ம் பரிசாக ரூ. 20,000- மற்றும் மூன்றாம் பரிசாக ரூ. 15,000- வழங்கப்படும். அனைத்து தகுதி பெறும் பதிவுகளுக்கும் (all Valid Entries) பங்கேற்பு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். உள்ளீடுகளின் கடைசித் தேதி மார்ச் 15, 2023 ஆகும். போட்டி தொடர்பான கூடுதல் விவரங்கள் அமலாக்கப் பணியகத்தின் சமூக ஊடக பதிவுகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம் என அமலாக்கப்பிரிவு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.