Take a fresh look at your lifestyle.

தமிழக மத்திய சிறைச்சாலைகளில் ஆயுள் தண்டனைக் கைதிகள் 60 பேர் விடுதலை

53

அசாத்திகா கா அம்ரித் மகோத்சவ் திட்டத்தின் கீழ் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட் டத்தின் பகுதியாக தமிழக சிறைகளில் இருந்து 60 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

பிரதமர் நரேந்திரமோடி கடந்த மார்ச் 2021ஆம் ஆண்டு அசாத்திகா கா அம்ரித் மகோத்சவ் திட்டத்தை துவங்கினார். அம்ரித் மகோத்சவ் என்பது ஆங்கிலேயேர்களின் ஆட்சியில் இருந்து இந்தியாவின் சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளை குறிக்கும் பெரிய கொண்டாட்ட த்தின் நெக்டர் ஆகும். அதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் உள்ள ஆயுள் தண்டனைக் கைதிகள் நன்னடத்தையின் கீழ் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி அம்ரித் மகோத்சவ் திட்டத்தின் கீழ் 75வது குடியரசுதின ஆண்டை ஒட்டி தமிழகத்தில் மத்திய சிறை களில் உள்ள 60 ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தர விட்டது.

அது தொடர்பாக சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘அசாத்திகா கா அம்ரித் மகோத்சவ் என்ற திட்டத்தின் கீழ் தமிழக தமிழக அரசின் உத்தரவின் படி தமிழக மத்திய சிறைச்சாலைகளில் இருந்து 58 ஆண் கைதிகள், 2 பெண் கைதிகள் என மொத்தம் 60 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதன்படி சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து ஒருவர், வேலூர் மத்திய சிறை 9, கடலூர் 12, திருச்சி 9, கோவை 12, மதுரை 1, நெல்லை பாளையங்கோட்டை 4, புழல் பெண்கள் சிறை 1, கோவை பெண்கள் சிறை 1. மொத்தம் 58 ஆண்கள், 2 பெண்கள். இவர்கள் ஏற் கன வே 66 சதவீதம் தங்கள் ஆயுள் தண்டனையை சிறைகளில் அனுபவித்தவர்கள். இவர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையான கைதிகளுக்கு அவர்கள் புது வாழ்வை இனிதே துவங்கும் வகையில் என்ஜிஓக்கள் உதவியுடன் மளிகைப் பொருட்கள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.