Take a fresh look at your lifestyle.

தமிழக அளவில் துப்பாக்கி சுடும் போட்டி: தங்கப்பதக்கம் வென்றார் கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கார்த்திகேயன்

102

தமிழக அளவில் உயர் காவல் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் இறுதி போட்டி சென்னையில் உள்ள கமாண்டோ துப்பாக்கி சுடும் தளத்தில் (commando Shooting Range) நடைபெற்றது. தமிழகம் முழுவதிலும் இருந்து 36 உயர் காவல் அதிகாரிகள் இந்த இறுதி போட்டியில் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, ஏடிஜிபி அமல்ராஜ், மகேஷ் குமார் அகர்வால் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கு முன்பு கடந்த மூன்று மாதங்களில் தமிழகத்தில் உள்ள நான்கு காவல் மண்டலங்கள் மற்றும் தனி பிரிவுகளில் உள்ள அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் (ASP முதல் DGP வரை) துப்பாக்கி சுடும் போட்டி நடைப்பெற்றது. இந்த போட்டிகளில் பெற்ற மதிப்பெண்களை வைத்து 36 காவல் உயர் அதிகாரிகள் இறுதி போட்டிக்கு தேர்வு பெற்றனர். இறுதி போட்டி இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்த போட்டியில் கை துப்பாக்கி (Pistol) மற்றும் துப்பாக்கி (Rifle) பிரிவுகளில் கீழ்கண்ட காவல் அதிகாரிகள் பதக்கங்களை வென்றனர்.

* கைத்துப்பாக்கிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர்கள்:

கை துப்பாக்கி சுடும் போட்டி (Pistol/Revolver): ஸ்ரீஅபிநவ், காவல் கண்காணிப்பாளர், -தங்க பதக்கம், சேலம் மாவட்டம்.

  • வெள்ளிப்பதக்கம்

டிஜிபி சைலேந்திர பாபு, – வெள்ளி பதக்கம், தலைமை இயக்குநர் மற்றும் படைத் தலைவர், தமிழ்நாடு.
திருநாவுக்கரசு, வெள்ளி பதக்கம், கண்காணிப்பாளர், பாதுகாப்புப் பிரிவு.

  • வெண்கலப்பதக்கம்:

பரவேஷ் குமார், காவல்துறை துணைத் தலைவர், திருநெல்வேலி சரகம்.
சாய் சரண் தேஜஸ்வி, கண்காணிப்பாளர், கிருஷ்ணகிரி மாவட்டம்.
கார்த்திகேயன், காவல் துணை -ஆணையர், கீழ்ப்பாக்கம், சென்னை.
நிஷா பார்த்திபன், வெண்கலம் கண்காணிப்பாளர், புதுக்கோட்டை மாவட்டம்.

துப்பாக்கி சுடும் போட்டி (Rifle):
–––––––––––––––––––––––––

  • தங்கப்பதக்கம்
    ––––––––––––

கார்த்திகேயன், காவல் துணை ஆணையர், கீழ்ப்பாக்கம், சென்னை.

  • வெள்ளிப்பதக்கம்:
    –––––––––––––––

நிஷா பார்த்திபன், இ.கா.ப, காவல் கண்காணிப்பாளர், புதுக்கோட்டை மாவட்டம்.
சைலேந்திர பாபு, டிஜிபி, தமிழ்நாடு.
திருநாவுக்கரசு, காவல் கண்காணிப்பாளர், பாதுகாப்பு பிரிவு. வெண்கலப்பதக்கம்

இந்த இரண்டு போட்களில் முதல் பண்ணிரண்டு இடங்களை பெற்ற அதிகாரிகளுக்குள் மீண்டும் ஒரு போட்டி வைக்கப்பட்டு, அதில் கீழ்கண்ட மூன்று காவல் அதிகாரிகள் Champion of Champion கோப்பையை வென்றனர்.

அவர்கள் விவரம்:

முதலிடம் கார்த்திகேயன், துணை ஆணையர், கீழ்ப்பாக்கம், சென்னை.
2ம் இடம்: பரவேஷ் குமார், காவல்துறை துணைத்தலைவர் திருநெல்வேலி சரகம்.
3வது இடம்: ஸ்ரீஅபிநவ், காவல் கண்காணிப்பாளர், -சேலம் மாவட்டம்.