Take a fresh look at your lifestyle.

தமிழகம் முழுவதும் போகிப் பண்டிகை இன்று உற்சாக கொண்டாட்டம்

45

தமிழகம் முழுவதும் இன்று போகி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சிறுவர்கள் மளம் அடித்து ஆட்டம் போட்டனர்.

இன்று முதல் தமிழகம் முழுவதும் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதம் கடைசி நாள் போகி பண்டிகையாகும். பொங்கலை வரவேற்கும் பொருட்டு வீடுகளை வெள்ளை அடித்து புதுப்பிப்போம். அதேசமயம் வீட்டில் பயன்படுத்தாத, பழைய பொருட்களை தீயிட்டு எரிப்பதால், நம் மனதில் உள்ள கெட்ட எண்ணங்கள் நீங்கும் என்பது போகி பண்டிகையின் நம்பிக்கையாகும்.

இந்நாளில் பழையன கழித்து புதியன புகவேண்டும் என்பதற்காக போகி பண்டிகை கொண்டாப்படுகிறது.புகையில்லா போகியை மக்கள் கொண்டாட வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு வலியுறுத்தி இருந்தது. மாவட்டம் தோறும் அதற்கான பிரச்சாரம் செய்யப் பட்டது. பண்டிகையைக் கொண்டாட வழிகாட்டு நெறிமுறைகளும் வழங்க ப்பட்டன. போகி பண்டிகையான இன்று அதிகாலை உற்சாகமாக பழைய மற்றும் தேவை யற்ற பொருட் களை மக்கள் தங்கள் வீட்டு வாசலில் தீயிட்டு கொளுத்தினர். தனைத் தொடர்ந்து சிறுவர்கள் ஒன்றுகூடி கொழுந்துவிட்டு எரியும் தீயைச் சுற்றி நின்று மேளம் அடித்து ஆட்டம் போட்டு போகிப் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

வீட்டில் இருந்த பழைய பாய், தலையணை, ஆடைகள், வீட்டு உபயோக பொருட்கள் போன்றவற்றை பொதுமக்கள் வீதியில் வைத்து எரித்ததால் பல வீதிகளின் வீட்டு வாசல்களில் எரிந்த பொருட்கள் குவியல் குவியலாக காணப்பட்டது. சென்னையில் போகிப் பண்டிகையை முன்னிட்டு பல பொருட்களை எரிப்பந்தால் எழுந்த புகையால் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு கடும் புகை சூழ்ந்தது. புகை மூட்டம் காரணமாக சாலைகளில் செல்வோர் முகப்பு விளக்கை ஏறியவிட்டப்படி சென்றனர்.