தமிழகத்தில் உள்ள பெண்கள் தனிச்சிறைகளில் பெண்கள் தின கொண்டாட்டம் நடைபெற்றது.
இந்தியா முழுவதும் நேற்று உலக மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து பெண்கள் தனிச்சிறை மற்றும் பெண்கள் கிளைச்சிறைகளில் மகளிர் தினம் கொண்டாட்டம் சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி உத்தரவின் பேரில் நடைபெற்றது. உலக மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் பெண் சிறைவாசிகளுக்கென அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் உதவியோடு பல்வேறு சிறப்பு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், ஆகியவை சம்பந்தப்பட்ட சிறைத்துறை துணைத் தலைவர்கள், கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற சிறைவாசிகளுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் மொத்தம் 816 பெண் சிறைவாசிகள் பங்கேற்றனர். மேலும் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து தனிச்சிறைகள், தனிக் பெண்கள் கிளைச்சிறைகள் மற்றும் பெண்கள் கிளைச் சிறைகளிலும் சிறப்பு உணவாக இனிப்பு, முட்டை, வெஜிடெபிள் பிரியாணி ஆகியவை தயார் செய்து அனைத்து பெண் சிறைவாசிகளுக்கும் வழங்கப்பட்டது.