Take a fresh look at your lifestyle.

‘தமிழகம்’ என குறிப்பிட்டது ஏன்? என தமிழக கவர்னர் ஆர்‌.என்‌.ரவி விளக்கம்

104

‘தமிழகம்’ என குறிப்பிட்டது ஏன்? என தமிழக கவர்னர் ஆர்‌.என்‌.ரவி விளக்கம் அளித் துள்ளார். எனது பேச்சின் அடிப்படையில் தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை என பொருள் கொள்வது தவறானது என்று கவர்னர் கூறியுள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு கவர்னர் ஆர்‌.என்‌. ரவி இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

“2023 ஜனவரி 4 ம்‌ தேதி அன்று கவர்னர் மாளிகையில்‌, சமீபத்தில்‌ நிறைவடைந்த “காசி யுடன்‌ தமிழ்‌ மக்களின்‌ பழமையான கலாசார தொடர்பை கொண்டாடும்‌‘ ஒரு மாத காசி – தமிழ்‌ சங்கமம்‌ விழாவில்‌ பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப்‌ பாராட்டும்‌ நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்வில்‌ வரலாற்றுப்‌ பண்பாடு பற்றிப்‌ பேசும்‌ போது, காசி மற்றும்‌ தமிழ்நாட்டுக்கும்‌ இடையே உள்ள தொடர்பை குறிக்க, ‘தமிழகம்‌‘ என்ற வார்த்தையைப்‌ பயன்படுத்தினேன்‌. அந்தக்‌ காலத்தில்‌ ‘தமிழ்நாடு’ என்பது இருக்கவில்லை. எனவே வர லாற்றுப்‌ பண்பாட்டுச்‌ சூழலில்‌, “தமிழகம்‌‘ என்பதை ‘மிகவும்‌ பொருத்தமான வெளிப் பாடு’ என்ற கண்ணோட்டத்தில்‌ குறிப்பிட்டேன்‌. எனது கண்ணோட்டத்தை “தமிழ்நாட்டின்‌ பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல’ பொருள்‌ கொள்வதோ அனுமானம்‌ செய்து கொள்வதோ தவறானது மற்றும்‌ யதார்த்தத்துக்கு புறம்பானது என்று தெரிவித்துக்‌ கொள் கிறேன்‌”. எனது பேச்சின்‌ அடிப்படை புரியாமல்‌, கவர்னர் தமிழ் நாட்டின்‌ பெயரை மாற்று வதற்கான பரிந்துரை” எனும்‌ வாதங்கள்‌, விவாதப்பொருளாகி இருக்கிறது. அதற்கு முற்றுப் புள்ளி வைக்கவே இந்த விளக்கம்‌. இவ்வாறு கவர்னர் அந்த செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.