Take a fresh look at your lifestyle.

ஐஜி ஈஸ்வரமூர்த்தி உள்பட 27 போலீஸ் அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் பதக்கம் * மத்திய அரசு அறிவிப்பு

President medal for 27 police officers

76

சென்னை, ஆக. 14–

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக காவல்துறையில் 1 ஏடிஜி, 2 ஐஜிக்கள் உள்பட 27 போலீஸ் அதிகாரிகளுக்கு குடியரசுத்தலைவர் பதக்கம் வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்திய அளவில் காவல்துறையில் பணிபுரியும் ஐபிஎஸ் மற்றும் மாநில அரசு அதிகாரிகளுக்கு அவர்களது மெச்சத்தகுந்த பணியை பாராட்டி ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று விருது வழங்கி மத்திய அரசு கவுரவிக்கிறது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறையின் 27 அலுவலர்களுக்கு இந்திய குடியரசுத் தலைவர் விருதுகளை அறிவித்துள்ளது.

இந்திய குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான (President Police Medal for Distinguished Service) காவல் விருதுகள் தமிழ்நாடு காவல்துறையைச் சார்ந்த மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அவர்களின் பெயர்கள் பின்வருமாறு

1. சங்கர், ஏடிஜிபி, நிர்வாகம், சென்னை
2. ஈஸ்வரமூர்த்தி, ஐஜி. உள்நாட்டு பாதுகாப்பு, சென்னை
3. மாடசாமி, காவல்துறை துணை ஆணையாளர், சட்டம் மற்றும் ஒழுங்கு (வடக்கு), சேலம் மாநகரம்.

இந்திய குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்கப் பணிக்கான (President’s Police Medal for Meritorious Service) காவல் விருதுகள் தமிழ்நாடு காவல்துறையைச் சார்ந்த 24 அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அவர்களின் பெயர்கள் பின்வருமாறு:

1) நஜ்முல் ஹோடா, காவல்துறை ஆணையாளர், சேலம் மாநகரம்
2) ஜா.முத்தரசி, காவல் கண்காணிப்பாளர்-II, குற்றப்பிரிவு, குற்றப்புலனாய்வுத்துறை, சென்னை.
3) ஜி. நாகஜோதி, காவல் துணை ஆணையாளர், மத்திய குற்றப்பிரிவு-I, பெருநகர காவல் சென்னைக்ஷ
4) டாக்டர் எம். சுதாகர், காவல் கண்காணிப்பாளர், காஞ்சிபுரம் மாவட்டம்
5) சண்முக பிரியா, காவல் கண்காணிப்பாளர், வெளிநாடுவாழ் இந்தியர் பிரிவு, சென்னை
6) மயில்வாகனன், காவல் கண்காணிப்பாளர், மேற்கு சரகம், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை , சென்னை
7) சரவணன், காவல் கண்காணிப்பாளர்-II, தனிப் பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, சென்னை.


8) ராஜேந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு, புதுக்கோட்டை
9) வேல்முருகன், காவல் உதவி ஆணையர், இணையதள குற்றப்பிரிவு, மத்திய குற்றப்பிரிவு, பெருநகர காவல் சென்னை,
10) சவரிநாதன், காவல் துணை கண்காணிப்பாளர், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம், காவல் கட்டுப்பாட்டு அறை, சென்னை,
11) புருஷோத்தமன், காவல் துணை கண்காணிப்பாளர், சிபிசிஐடி மெட்ரோ II, சென்னை.
12) ஜெயதுரை ஜான் கென்னடி, காவல் துணை கண்காணிப்பாளர், ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவுப் பிரிவு, சென்னை.க்ஷ
13) தனராசு, காவல் துணை கண்காணிப்பாளர், தாராபுரம் உட்கோட்டம், திருப்பூர் மாவட்டம்.
14) கவுதமன், காவல் துணை கண்காணிப்பாளர், சிறப்பு புலனாய்வு பிரிவு, குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, சென்னை,
15) சரவணன், காவல் உதவி ஆணையாளர், நுண்ணறிவு பிரிவு, சேலம் மாநகரம்.
16) சுதேசன், காவல் ஆய்வாளர், தக்கலை வட்டம், கன்னியாகுமரி மாவட்டம்.
17) வீரகுமார், காவல் ஆய்வாளர், யானை கவுணி காவல் நிலையம், வடக்கு மண்டலம், பெருநகர காவல் சென்னை
18) சா.சுப்புரவேல், காவல் ஆய்வாளர், பாதுகாப்பு பிரிவு, குற்றப்புலனாய்வுத்துறை, சென்னை
19) தி.ராபின் ஞானசிங், காவல் ஆய்வாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, திருநெல்வேலி. 20) சூரியகலா, காவல் ஆய்வாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை. மதுரை.
21) பவுல் பாக்கியராஜ், காவல் ஆய்வாளர், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 5 – ஆம் அணி, ஆவடி. 22) நா. வெங்கடசுப்ரமணியன், காவல் உதவி ஆய்வாளர், தனிப் பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, சென்னை.
23) செல்வராஜ், காவல் உதவி ஆய்வாளர், தமிழ்நாடு அதிதீவிரப்படை பயிற்சி பள்ளி, சென்னை. 24) தா.அந்தோணி தங்கராஜ், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, நகரம்-III, சென்னை.