Take a fresh look at your lifestyle.

தமிழகத்தில் 76 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

76 dsps transfered in tamil nadu dgp sylendrababu ordered

67

தமிழகத்தில் 76 காவல்துறை டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கு விசாரணை சர்ச்சையிலௌ சிக்கிய 3 டிஎஸ்பிக்களுக்கும் பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆருத்ரா கோல்ட் டிரேடிங் வழக்கு தொடர்பான பொருளாதார குற்றப்பிரிவு விசாரணையில் இருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட மூன்று டிஎஸ்பிக்களான கண்ணன் தமிழ்நாடு சிறப்பு காவல் படை மணிமுத்தாறு உதவி கமாண்டண்ட்டாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் டிஎஸ்பி சம்பத் ராமநாதபுரம் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கும், சுரேஷ் ராமநாதபுரம் சரக போலீஸ் பயிற்சி மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தாம்பரம் காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராக சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராக ரித்து உள்ளிட்ட 76 டிஎஸ்பிக்கள் இன்று அதிரடியாக மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இந்த பணி மாற்றம் செய்யப்பட்ட 76 டிஎஸ்பிக்களில் பெரும்பாலானோர் காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஎஸ்பிக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.