தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிறைத்துறை தலைவராக டிஜிபி அமரேஷ் புஜாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர், சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங் ஆகியோர் இன்றுடன் பணி ஓய்வு பெற்றனர். இந்நிலையில் அந்த பதவிகளுக்கு புதிய அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அபய்குமார் சிங்
அது தொடர்பாக கூடுதல் தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலாளர் பனீந்திரரெட்டி உத்தரவு விவரம்:–
சஞ்சய் குமார்
சைபர்கிரைம் பிரிவு டிஜிபியாக இருந்த அமரேஷ் புஜாரி சிறைத்துறை இயக்குராகவும், ஆயுதப்படை ஏடிஜிபி அபய்குமார் சிங் சிபிசிஐடி ஏடிஜிபியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். நவீனமயமாக்கல் பிரிவு ஏடிஜிபி சஞ்சய்குமார் சைபர்கிரைம் பிரிவுக்கு மாற்றப் பட்டுள்ளார்.
ராதிகா
டிஜிபி அலுவலக தலைமையிட ஏடிஜிபி வெங்கட்ராமன் நவீனமயமாக்கல் பிரிவை கூடுதலாக கவனிப்பார். ஜெனரல் பிரிவு ஐஜி ராதிகா ஆயுதப்படை ஐஜி யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.