தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் வரும் 18 ந்தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தென் மேற்கு வங்கக்கடல் பகுதி, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதி, மத்திய கிழக்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் 16 மற்றும் 17 ந்தேதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் குழித்துறை 5 செ.மீ., சிவகாசி, வெம்பக்கோட்டை, மணிமுத்தாறு, திற்பரப்பு தலா 3 செ.மீ., தேக்கடி, பாபநாசம், மயிலாடி, ஸ்ரீவில்லிபுத்தூர், காட்பாடி, ஆயிக்குடி, சாத்தூர், முதுகுளத்தூர், கன்னியாகுமரி, கடல்குடி, கொட்டாரம், மாஞ்சோலை தலா 2 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.